Unave Amirtham 23-06-2015 “Horse gram reduces body weight effectively” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 23-06-2015 “Horse gram reduces body weight effectively” – NEWS 7 TAMIL Show
It is fat that threatens us often with its immediate effects. To get rid of fat, Siddha specialist Arun suggests Horse Gram. Ir has amazing health benefits like, it reduces body fat, it removes gall bladder stones and cures throat related problems in children. So far you would have known about Kollu Rasam, Kollu Soup but Aishwarya Raghav has Kollu Kurma for you.


கொழுப்பை குறைக்கும் கொள்ளு

கொள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, உடல் பருமன் குறைக்கும்.
கொள்ளு பித்த பை கற்களை வெளியேற்றும் ஆற்றல் உடையது. கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இன்றைய அமிர்தம் : கொள்ளு குருமா

தேவையான பொருட்கள் :

ஊர வைத்த கொள்ளு, வெங்காயம், தக்காளி, பட்டை, கிராம்பு, தேங்காய் பால். மிளகாய் தூள், தனியா தூள், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பொட்டு கடலை, பூண்டு, உப்பு, எண்ணெய்

செய்முறை :

தேங்காய், பொட்டு கடலை, பூண்டு, பச்சை மிளகாயை நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய் பொடி மற்றும் தனிய பொடி சேர்த்து வதக்கவும். அதில் ஊற வைத்து வேக வைத்த கொள்ளை சேர்க்கவும். அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். கடைசியாக தேங்காய் பால் சேர்த்து சிறுது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான சத்தான கொள்ளு குருமா தயார்.