Suu 13-06-2016 Makkal tv Show

Tags: Makkal tv Shows

admin

Suu 13-06-2016 Makkal tv Show | Makkal TV Suu program 13th June 2016
Our show will be a gate way to the new inventions as well as a motivator for the Student & Public…….


Attakathi, Makkal tv Shows

மாற்றுவழி அறிவியல் என்னும் சிந்தனையை மையப்படுத்தியே இந்நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டுள்ளது. அன்றாடம் நிகழும் ஏராளமான கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கில், வளர்ந்துவரும் அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக “சூ” வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கண்டுபிடிப்பாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகள் குறித்தும் அதில் பயன்படுத்தப்பட்ட நியதிகள் குறித்தும், கோட்பாடுகள் தெரிவிக்கின்றனர். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் தயாரிப்பு முறைகளை காட்சிப்படுத்துகிறது இந்நிகழ்ச்சி. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுவான ஆய்வாளர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். வளர்ந்து வரும் அறிவியலாளர்களுக்கும், அறிவியல் ஆர்வம் உடையவர்களுக்கும் மக்கள் தொலைக்காட்சி புதியதொரு களத்தினை அமைத்துக் கொடுத்துள்ளது. அது மட்டுமின்றி மக்களின் அன்றாடத் தேவைகளையும் எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகள் வாரந்தோறும் அரங்கேற காத்திருக்கின்றன. வீட்டிலேயே பயன்படுத்தும் வானூர்தி முதல் சுத்தமான குடிநீர் வரை அனைத்திலும் நிகழும் கண்டுபிடிப்புகளை அதன் நியதியோடு அறிமுகப்படுத்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் வருகை தருகின்றனர். இது அறிவியல் சாதனைகளை களமிறக்கும் நிகழ்ச்சி மட்டுமல்ல, பல்வேறு அறிவியல் ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாகும். மக்கள் தொலைக்காட்சியில் சூ சனிக்கிழமை தோறும் மாலை 05.02 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.