Dark Circles Under Eyes Home Remedy in Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


கருவளையத்தை போக்கும் ஒரு குறிப்பு | Dark Circles Under Eyes Home Remedy in Tamil


கண்களில் உண்டாகும் அதிகப்படியான சூட்டினால் கூட கருவளையம் தோன்றும். எளிய அழகுக் குறிப்புகளாலும் கருவளையத்தை போக்கிவிடலாம்.

நீங்கள் வெள்ளரிக்காயை கருவளையத்திற்கு உபயோகிப்பது பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள்.

அதேபோல் எலுமிச்சை கருமையை போக்கும். சுருக்கங்களை நீக்கும். இவ்விரண்டையும் வைத்து எப்படி கருவளையத்தை மறையச் செய்வது….

தேவையானவை :

வெள்ளரிக்காய் – 2 துண்டுகள்

எலுமிச்சை சாறு – அரை மூடி

1. வெள்ளரிக்காயை துருவி கொள்ளுங்கள்

2. அதனுடன் எலுமிச்சை சேர்த்து கலக்கவும்

3. பின்னர் இதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்கவும்

4. குளிர்ந்த பிறகு வெளியிலெடுத்து, சாறினை பிழிந்து கொள்ளுங்கள்

5. இந்த சாற்றினை கண்களுக்கு அடியில் தடவிக் கொள்ள வேண்டும்

6. 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்

7. மீதமுள்ள சாற்றினை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்

8. கண்கள் மிகச் சோர்வாக இருக்கும் சமயத்திலெல்லாம் கண்களை சுற்று தடவிக் கொள்ளலாம்

9. இவ்வாறு தினமும் இரு வேளை செய்து பாருங்கள்