Common Causes Of Excessive Hair Loss In Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


இவைகளும் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் | Common Causes Of Excessive Hair Loss In Tamil


ஒவ்வொரு முறை தலையை சீவும் போதும் கையில் கொத்தாக முடி வருகிறதா? அதைப் பார்க்கும் போதெல்லாம் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகிறீர்களா? எவ்வளவு முயற்சித்தும் தலைமுடி உதிர்வதை தடுக்க முடியவில்லையா?
தலைமுடி உதிர்வதை நிறுத்த வேண்டுமானால், அதற்கான காரணத்தை முதலில் அறிய வேண்டும். அதில் பலருக்கும் தெரிந்த காரணங்கள் மோசமான தலைமுடி பராமரிப்பு, அதிகப்படியான தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, வறட்சி, பொடுகு போன்றவை

அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்
அதிர்ச்சிகரமான நிகழ்வுகளான விபத்து, பிடித்தவர்களின் இறப்பு போன்றவற்றால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானால், அதன் காரணமான மன இறுக்கம் ஏற்பட்டு, தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.

வைட்டமின் ஏ மாத்திரைகள்
வைட்டமின் ஏ மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்து வந்தால், மயிர்கால்கள் பலவீனமாகி, தலைமுடி உதிர்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

புரோட்டீன் குறைபாடு
ஆரோக்கியமான தலைமுடிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. புரோட்டீன் தான் தலைமுடியின் வலிமைக்கு காரணம். அதன் குறைபாடு ஏற்பட்டால், அதிகப்படியான முடியை இழக்க வேண்டிவரும்.

பரம்பரை
சில நேரங்களில், மரபணுக்களும் தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கும். உங்கள் பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிகளுக்கு வழுக்கை தலை இருந்தால், உங்களுக்கும் வழுக்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் முதல் கட்டமாக தலைமுடி அதிகம் உதிர ஆரம்பிக்கும்.

திடீர் எடை குறைவு
கடுமையான டயட்டை மேற்கொண்டு, குறைந்த காலத்தில் அதிகளவு உடல் எடையைக் குறைத்தால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் மயிர்கால்கள் பலவீனமாகி, உதிர ஆரம்பிக்கும்.

நாள்பட்ட காய்ச்சல்
காய்ச்சலால் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் அவஸ்தைப்பட்டு வந்தால், அதன் காரணமாகவும் தலைமுடி அதிகம் உதிரும். எனவே காய்ச்சல் வந்தால், சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை
நிறைய பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுப்பார்கள். இப்படி இந்த மாத்திரைகளை அதிகமாக எடுத்த பல பெண்களின் உடலில் திடீர் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நிறைய முடி கொட்டியுள்ளது.