Coffee Good or Bad For You? | Tamil Healthy Tips

Tags: Tamil Health and Beauty Tips

admin


காபி குடிப்பது நல்லதா? கெட்டதா? | Coffee Good or Bad For You? | Tamil Healthy Tips


காபி பிடிக்காதவர்கள் மிகக் குறைவு. காலையில் எழுந்ததும் ஒரு காபியில்தான் தங்கள் நாளை இனிதே தொடங்குபவர்கள் ஏராளம். ஆனால் காபி உடலுக்கு நல்லதில்லை எனவும் , குடித்தால் நல்லது என பலவும் நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நன்மைகள் :

உடனடியாக புத்துண்ர்வு தருகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது.

காற்றில் பரவும் நோய்களை தடுக்கும்

இரைப்பை மற்றும் சிறு நீரக் கற்கள் வராது என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன

சர்க்கரை வியாதியை தடுக்கும் என கூறப்படுகிறது

சில வகையான புற்று நோய்களை வர விடாமல் தடுக்கிறது.

தீமைகள் :

அதிகமாக காபியை சாப்பிட்டால் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் உண்டு

ரத்தக் கொதிப்பை உண்டாக்கும்

கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும் என்கிறார்கள்.

ஆர்த்ரைடிஸ் வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன

கால்சியத்தை உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது

உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தும் அளவுக்கதிகமான ஈஸ்ட்ரோஜன் தீமையை தரும்.