Beetroot Benefits in Tamil | Tamil Healthy Tips

Tags: Tamil Health and Beauty Tips

admin


பீட்ரூட்டின் நன்மைகள் | Beetroot Benefits in Tamil | Tamil Healthy Tips


அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட்.

இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகிறார்கள்.

பீட்ரூட்டில் உள்ள கார்போ ஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல், அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் குணமாகும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.