Simbu New Best Friend Manjima Mohan !

Tags: Tamil Cinema News

admin


Simbu New Best Friend Manjima Mohan !
சிம்புவின் புது தோழி மஞ்சிமா

கவுதம் மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள மஞ்சிமா மோகன் இப்போது சிம்புவின் நெருங்கிய தோழியாக மாறி இருக்கிறார்.

நான் மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தில் நடித்தேன். அந்தப் படம் கேரளாவில் பெரிய ஹிட். அந்தப் படத்தில் என்னைப் பார்த்த இயக்குனர் கவுதம் மேனன், அவரோட அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிக்க அழைத்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிகளிலும் உருவாக்கியுள்ளது. தமிழில் சிம்புவுக்கு ஜோடியாகவும், தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறேன். நாக சைதன்யாவுடன் எளிதாக நட்பாகி விடலாம். ஆனால், சிம்பு அவரிலிருந்து மாறுபட்டவர். அதிகம் பேச மாட்டார். ஆனால் ஒருமுறை நெருக்கமாக பழக ஆரம்பித்தால் அவரைப்போல் ஒரு நல்ல நண்பரை இன்டஸ்ரியில் பார்க்க முடியாது என்கிறார் மஞ்சிமா மோகன்.