BBC Tamil News 24-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

கென்யாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிபிசிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் துப்பாக்கி கட்டுப்பாட்டு கொள்கை குறித்து விரக்தி வெளியிட்டார்.
தனது தந்தையின் நாடான கென்யாவுக்கு அதிபர் ஒபாமா முதலாவது அதிகாரபூர்வ விஜயமாக செல்கிறார். பிபிசிக்கு பிரத்தியேகமாக பேசிய அவர், இந்த விஜயம், கிழக்கு ஆப்பிரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவின் கரிசனையை காண்பிப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் தனது இயலாமை குறித்து தான் விரக்தியடைந்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் நிமிடத்திற்கு ஒரு பிள்ளையைக் கொல்லும் மலேரியாவுக்கு எதிராக புதிய தடுப்பு வருவதில் ஒரு படி முன்னேற்றம்!
மலேரியாவுக்கான புதிய தடுப்பு மருந்து ஒன்று ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படுவதற்கான முக்கியமான ஒரு கட்டத்தை தற்போது கடந்துள்ளது.
புதிய மருந்து பாதுகாப்பானது என்றும், நல்ல பலன் தருகிறது என்றும் ஐரோப்பிய மருத்துவ நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.
ஆனாலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்பவர்களுக்கு மலேரியா வரவே வராது என்று சொல்லிவிட முடியாது.

கியூபாவில் பெரிய மாற்றங்கள் நடந்தாலும், கியூப அரசாங்கத்தின் அரச ஊடகமான கிரான்மா மாறாமல் இருந்துவருகிறது.
கியூபாவில் பெரிய மாற்றங்கள் நடக்கின்றன. ஹவானாவில் அமெரிக்க தூதரகம் திரும்ப திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான பல தசாப்த பகையுணர்வு படிப்படியாக குறைகிறது.

ஆனால், அங்கு மாறாத ஒன்று ”கிரான்மா”. கிரான்மா என்றால் ஒன்றும் பாட்டியல்ல. கியூப அரசாங்கத்தின் அரச ஊடகம் அது.

பனிப்போர் காலகட்டத்தின் உச்சத்தில் பீடல் காஷ்ட்ரோவின் புரட்சிகர அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் கிரான்மா பத்திரிகை தனது பாணியை மாற்றிக்கொள்ளவில்லை.

21 ஆம் நூற்றாண்டின் ஊடக உலகில் அது எப்படி தாக்குப் பிடிக்கிறது?

அந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் செல்ல பிபிசிக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. இவை குறித்த பிபிசியின்ஒரு காணொளி.