BBC Tamil News 24-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-04-2015


இன்றைய நிகழ்ச்சியில்,

-முதலாம் உலகப் போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்த கலிபொலி யுத்தத்தின் நூற்றாண்டு நிறைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

-ஏராளமாக நிதி வைத்துள்ள இஸ்லாமிய அரசுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்பது தொடர்பில் பிடிப்பட்ட அவ்வமைப்பின் நிதிப் பொறுப்பளரிடம் பிபிசி நடத்திய விசாரணை.

-‘பிபிசி’ – இந்தப் பெயருக்கு உரிமை கோரி மும்பையின் பிரியாணி கடை ஒன்றும் ரொட்டிக் கடையொன்றும் நீதிமன்றம் சென்றுள்ளன.

பல வணிக நிறுவனங்களுக்கு அவர்களது வர்த்தகப் பெயர்கள் இப்போது பெரும் சொத்து.

வேறு யாராவது அந்த அடையாளத்தை பயன்படுத்தினால், அது பெரும் வாதத்தை கிளப்புவதுடன், சட்ட நடவடிக்கை வரை கொண்டு சென்றுவிடும்.

பிபிசி என்பது கூட உலகின் பல நாடுகளில் பல நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஒரு வணிகப் பெயர்.

இப்போது இந்தியாவில் இருந்துவந்துள்ள ஒரு வழக்கு குறித்த செய்தி, இங்கு பிபிசியில் எங்களுக்கு கொஞ்சம் நெருக்கமானதாக இருக்கிறது.

ஆம், அங்கு இரு நிறுவனங்கள், பிபிசி என்ற பெயருக்காக நீதிமன்றத்தில் மோதுகின்றன.

– ஆர்மீனிய மக்களை ஒட்டமான் பேரரசு சுற்றிவளைத்து நாடு கடத்திய, 20 ஆம் நூற்றாண்டின் பெருந்துயர நிகழ்வின், ‘நூறு வருட நிறைவு தினம்’ இன்று வெள்ளியன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்நிகழ்வில் பெரும் அளவிலானோர் கொல்லப்பட்டனர், அல்லது, பட்டினியாலும் நோயாலும் உயிரிழந்தனர்.

ஆர்மீனியாவும் வேறு இருபது நாடுகளும், இதனை ஒரு இனப்படுகொலை என்கின்றன.

ஆனால் இனப்படுகொலை என்பதை சரித்திர ரீதியில் கொஞ்சமும் ஏற்க முடியாது என ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் மையமான துருக்கி கூறுகிறது.