BBC Tamil News 22-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-04-2015

இன்றைய செய்தியறிக்கையில்,

– ஏமனில் தமது வான் தாக்குதலை நிறுத்திய சவுதி அரேபியா, ஹூத்திகள் ஒரு இராணுவ தளத்தை கைப்பற்றயிதை அடுத்து, ஒரே நாளில் அதை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

– இங்கே பிரிட்டனில், பிள்ளையைப் பெற்றவர்களில், ஒருவரின் அனுமதியின்றி மற்றவரால் வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. – சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்நாட்டு மக்களிடம் இருந்து பிரித்து வைப்பதாக பார்க்கப்படும் தங்கும் கூடங்கள் பற்றிய பிபிசியின் செய்திக்குறிப்பு.

– செல்வம் கொழிக்கும் சிங்கப்பூரில், வெளிநாட்டு தொழிலாளர்கள் பெருமளவில் சென்று, சம்பாதித்து, ஊரில் உள்ள தமது குடும்பங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

அவர்களில் பலர் நிரம்பி வழியும் தங்கும் கூடங்களில்தான் தங்கியுள்ளனர்.

அவற்றில் சில மாற்றங்களை செய்ய அரசாங்கம் விரும்புகிறது.

ஆனால், அந்த மாற்றங்கள் குறித்து எல்லோருக்கும் திருப்தி என்று கூறமுடியாது.

சிங்கப்பூரில் உள்நாட்டு மக்களிடம் இருந்து வெளிநாட்டு தொழிலாளர்களை பிரித்து வைக்கும் இடங்களாக இந்த தங்கும் கூடங்களை சிலர் பார்க்கிறார்கள்.

அங்கு தொழிலாளரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படுகின்றது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.