BBC Tamil News 19-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது எல்லைகளை இறுக்க, பால்கன் நாடுகளில் குடியேறிகள் ஆயிரக்கணக்கானோர் மோசமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கின்றனர்!

– சீனாவில் தொழிலாளர் போராட்டங்களால் உற்பத்திக் குறையும் நேரத்தில், பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவதை புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன!

சீனாவின் அதிபர் ஐந்துநாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை பிரிட்டன் வருகின்றார்.

இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய பொற்காலம் என்று இருநாடுகளும் இந்த விஜயத்தை வர்ணித்துள்ளன.

இதனிடையே, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6.9 வீதமாக குறைந்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

எதிர்ப்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி இல்லாத சூழலில், அந்நாட்டின் உற்பத்தியும் தொழிலாளர் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

– உயிரையும் பொருட்படுத்தாது இபோலா கிருமியைக் கட்டுப்படுத்தப் போராடிய நைஜீரியாவுடைய நிஜவாழ்க்கை நாயகர்களின் கதை திரைப்படமாகிறது!

இபோலா நோய் கடந்த ஆண்டு நைஜீரியாவை உலுக்கியெடுத்த காலகட்டம் பற்றிய ஒரு திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.

’93 DAYS’ (93 நாட்கள்) என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தில் அமெரிக்க நடிகர் டான்னி குளோவருடன் இணைந்து நைஜீரியாவின் நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.