BBC Tamil News 16-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 16-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– குடியேறிகள் நெருக்கடியை தணிக்கும் புதிய முயற்சியாக துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுக்கு ஒப்புதல். பதிலாக, குடியேறிகளை துருக்கி தடுத்தாக வேண்டும்.

– வாழ்க்கையை மீளக் கட்டியமைக்க துடிக்கும் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் சிறார் போராளிகள்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் உள்நாட்டுப்போர் நூற்றுக்கணக்கான சிறார்களின் உயிரையும், மேலும் பல சிறார்களின் குழந்தைப் பராயத்தையும் கொள்ளைகொண்டது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஆயுதக்குழுக்களில் பத்தாயிரம் வரையிலான சிறார் அங்கம் வகிப்பதாக யுனிசெஃப் கூறுகின்றது.

அந்த நாடு மீண்டும் ஒரு வன்செயலில் உழன்றுகொண்டிருக்கும் நிலையில் ஆயுதக்குழுக்களில் இருந்து விடுதலையாகி, சுற்றவர நடக்கும் சண்டைக்கு மத்தியில் தமது வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்சிக்கும் மூன்று பிள்ளைகளை பிபிசி சந்தித்தது.

– மழலை மாறாமலே மறைந்த மகள், மறுபடியும் வாழ, அறிவியல் வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையில் அவரின் மூளையை உறையவைத்துள்ள பெற்றோர்.