BBC Tamil News 15-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 15-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

அகதிகள் நெருக்கடி குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் துருக்கியை பிரஸல்ஸில் சந்திக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், ‘’குடியேறிகள் நெருக்கடி’’ குறித்து துருக்கியுடன் பிரஸல்ஸில் பேச்சு நடத்துகிறார்கள். அனைத்து இருபத்தியெட்டு உறுப்பு நாடுகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றன.

குடியேறிகள் நெருக்கடியை குறைக்க ஐரோப்பாவின் ஒன்றுபட்ட நடவடிக்கை தேவை என்று ஜேர்மனிய ஆட்சித்தலைவி, ஏங்கிலா மேர்க்கல் வலியுறுத்துகிறார்.

அலையலையாக குடியேறிகள் வருவதை தடுப்பதற்காக துருக்கிக்கு நிதி உதவி செய்வது அதில் ஒன்றாகும்.

ஐரோப்பாவுக்கு இந்த வருடத்தில் வந்த ஆறு லட்சம் அகதிகளில் பெரும்பாலானோர் துருக்கி வழியாகவே வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இப்போது ஜேர்மனியில் உள்ளனர்.

ஆனாலும் ஜேர்மனியில் அகதிகளுக்கான வரவேற்பு குறைகிறது.

மியன்மாரில் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசாங்கத்துக்கும் எட்டு ஆயுதக் குழுக்களுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதிகமாக இயங்கிவரும் குழுக்கள் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை.
மியன்மாரில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் பௌத்த பிக்குகள் அமைப்பான மா பா தா வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்துவருகிறது. ஆனால் அது முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தைத் தூண்டுவதாக விமர்சிக்கப்படுகிறது.

– கொள்கையில் ஒரு மாற்றமாக, தான் 2017இல் பதவி விலகும்போது, ஆப்கானிஸ்தானில் 5500க்கும் அதிகமான அமெரிக்க படையினரை தொடர்ந்து வைத்திருக்கப்போவது குறித்து அதிபர் ஒபாமா அறிவிப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐரோப்பாவில் அழிவின் விளிம்புக்கு சென்று தற்போது ஒரு சில இடங்களில் தழைக்கத் துவங்கியுள்ள ஓநாய்களால் கால்நடைகளுக்கு ஆபத்துவர, அவற்றை விசேடக் குழுக்கள் மாத்திரம் வேட்டையா ஐரோப்பிய சட்டம் அனுமதித்துள்ளது.