BBC Tamil News 14-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 14-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் அதிகரிக்கின்றன. பிரச்சினையைத் தூண்டுவதாக தாம் கருதும் பாலஸ்தீனர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு இஸ்ரேல் அனுமதி.
இஸ்ரேலில் தற்போது தொடர்ச்சியாக நடந்துவருகின்ற வன்முறையின் பின்னணியில் பழைய ஜெருசலெத்தில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் என்று இருமதத்தினருக்கும் புனிதத் தலமாக விளங்கும் ஒரு இடம் இருப்பது பற்றி விளக்கும் ஒரு விவரணம் இது.

– ஐரோப்பாவுக்கு பயணிக்க முயலும் குடியேறிகள் எண்ணிக்கை அதிகரிக்க, போலி கடவுச் சீட்டு விற்கும் கும்பல்களுக்கு லட்சக்கணக்கில் வியாபாரம்.
போலிக் கடவுச் சீட்டுகளை பல ஆயிரக்கணக்கான யூரோக்களுக்கு விற்பதன் மூலம் குடியேறிகள் நெருக்கடியை குற்றக்கும்பல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக ஐநா கூறுகின்றது.

இதனால் அந்த குழுக்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றன.

கடல் மற்றும் தரை மூலமான ஆபத்தான பயணங்களை தவிர்க்க, போலி ஆவணங்களுடன், விமானத்தில் பயணித்து தமது அதிர்ஸ்டத்தை சோதித்துப் பார்க்க அகதிகள் விளைகிறார்கள்.

இது மோசடி ஆவணங்களை தயாரிக்கும் கும்பல்களுக்கு வாய்ப்பாக போய்விடுகிறது.

– துருக்கியில் அங்காராவில் கடந்த சனிக்கிழமை அமைதி ஊர்வலம் ஒன்றில் தொண்ணூற்று ஏழு பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மூன்று துருக்கிய அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.