BBC Tamil News 13-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 13-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– மலேஷியன் ஏர்லைன்ஸ் எம்.எச் 17 விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக கூறுகிறது நெதர்லாந்து விசாரணை.

– சவுதியில் கசையடியை எதிர்நோக்கும் பிரிட்டிஷ் வயோதிபர் விஷயத்துக்கும், சிறை ஒப்பந்தத்தில் இருந்து தாம் பின்வாங்கியதற்கும் தொடர்பு இல்லை என்கிறது பிரிட்டன்.
மதுபானத்தை வைத்திருந்ததற்காக சவுதி அரேபியாவில் பிரிட்டிஷ் வயோதிபர் ஒருவர் கசையடியை எதிர்நோக்கியுள்ளார்.

அவர் ஏற்கனவே ஒரு வருடம் சிறைத்தண்டனையையும் அனுபவித்துவிட்டார்.

இது குறித்து சவுதி அரசுக்கு பிரிட்டிஷ் பிரதமர் எழுதவுள்ளார்.

சவுதியுடனான 8.9 மில்லியன் டாலர்கள் பெறுமதியான சர்ச்சைக்குரிய சிறை ஒப்பந்தம் ஒன்றில் இருந்து பிரிட்டன் பின்வாங்கிய நிலையில் இது நடந்துள்ளது.

– மோட்டார் சைக்கிள் பேட்டரிகளின் உதவியில் குளோரின் தயாரிக்கும் புதிய கருவியை கொண்டு வறிய நாடுகளில் குடிநீர் சுத்திகரிப்பை எளிமையாக்க முயற்சி.