BBC Tamil News 12-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– துருக்கியில் சனிக்கிழமை நடந்த அமைதி ஊர்வலத்தின் மீதான குண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பின் மீது துருக்கி குற்றச்சாட்டு.

– பாலத்தீனத்தில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் தனி நபர்களின் எதிர்ப்பொ போராட்டங்களும் தாக்குதல்களும்.
பாலத்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான வன்செயல்கள் அதிகரித்துவரும் ஜெரூசலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரபுக்காரர் ஒருவர் திங்களன்று காலையில் கொல்லப்பட்டார். தமது அதிகாரியை அவர் கத்தியால் குத்த முயற்சித்ததாக போலிஸ் கூறுகின்றது.

அதேவேளை நாட்டின் வடபகுதியில், பஸ் நிறுத்தம் ஒன்றுக்குள் காரை கொண்டு மோதியதாக ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இரத்தக்களரி குறைவதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை.

– நெருப்புக் கோழிகளின் தலைநகரமான தென்னாப்பிரிக்காவில் அவற்றின் இறைச்சிக்கு இருந்துவந்த ஐரோப்பாவின் தடை நீங்கியதால் பண்ணைக்காரர்கள் மகிழ்ச்சி.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பறவைக் காய்ச்சல் பரவி பெரும் பாதிப்புக்கு உள்ளான தென்னாப்பிரிக்காவின் நெருப்புக்கோழிப் பண்ணைகள் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இறைச்சி வியாபாரமும், சுற்றுலாப் பயணிகள் வருகையும் சூடு பிடித்துள்ளது.