BBC Tamil News 04-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 04-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-செப்டம்பர் 11 தாக்குதலுகுப் பின்னர், அமெரிக்க உளவுத் துறை, கைதிகளை சித்ரவதை செய்தது உண்மைதான் என்று சி ஐ ஏவின் முன்னாள் தலைவர் பிபிசியிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், ஜார்ஜ் புஷ் ஆட்சியில், அமெரிக்க உளவுப் பிரிவான சி ஐ ஏ, கைதிகளை சித்ரவதை செய்வதை விசாரணை உத்தியாக கையாண்டது என அதன் முன்னாள் தலைமை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்டவர் ஒருவரிடம் இருந்து இவ்விஷயத்தில் ஒப்புதல் வருவது இதுவே முதல் முறை.

அந்நேரம் அமெரிக்க அதிபர் அலுவலகம் அவற்றுக்கு அனுமதி வழங்கியிருந்ததால், அந்த விசாரணை முறைகள் சித்ரவதைகள் ஆகாது என சி ஐ ஏ தொடர்ந்தும் கூறிவந்துள்ளது.

-மியான்மர் வெள்ளத்தில் 46 பேர் பலி. அரசாங்கம் சர்வதேச உதவியைக் கோரியுள்ளது.

-பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக, அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க, பிரிட்டன் வரியை அமல் செய்யவுள்ளது.
பெருமளவு அங்காடிகளில் தற்போது பிளாஸ்டிக் பைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், பிளாஸ்டிக் அழிய ஆயிரக்கணக்கான வருடங்கள் பிடிக்கும் என்பதால், சுற்றுச்சூழல் மீது அவற்றின் தாக்கம் மிகவும் அதிகம்.

இங்கு பிரிட்டனில் அவற்றின் மீது சிறிய வரியை விதிப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கான சட்டங்கள் விரைவில் வரவுள்ளன.